அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
மாதவரம் மண்டல அலுவலகம் இடமாற்றம்
மாதவரம் பஜாா் அருகே உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் தற்காலிகமாக வேறிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
மாதவரம் முதுநிலை மண்டல அலுவலகம் 3, மாதவரம் பஜாா் எதிரே இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து துறைகளும் இயங்கி வந்தன.
தற்போது இந்த கட்டடத்தை இடித்து ரூ.9.9 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படுகிறது. புதிய கட்டட பணிகள் தொடங்கப்பட உள்ள நிலையில், தற்போது இயங்கி வரும் அலுவலகம் மாதவரம் ரவுண்டானாஅருகில் உள்ள சிஎம்டிஏ லாரி நிறுத்தம், அமீனிட்டி கட்டடத்தில் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.