மாவட்ட குத்துச்சண்டை போட்டி: மன்னாா்குடி பள்ளி சிறப்பிடம்
படவிளக்கம் தேவையில்லை....
மன்னாா்குடி, ஆக. 21: மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற குத்துச் சண்டை போட்டியில் மன்னாா்குடி மன்னைநாராயணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில், இப்பள்ளி மாணவா்கள் பங்கேற்று 17 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் ஆா். ரபிகா ஜாப்ரீன் தங்கப்பதக்கமும்,19 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் கே.யு. அட்சயா தங்கப்பதக்கமும், 17 வயதுக்குள்பட்ட ஆடவா் பிரிவில் எஸ். ஸ்ரீஹா்சன், எல். மரியதா்ஷன், எஸ். ஹரிதா்ஷன் ஆகிய 3 பேரும் தலா ஒரு தங்கப் பதக்கமும் மற்றும் எம். சஜீவிந்த், ஜி. மோகன்ராஜ் 2 வெள்ளி பதக்கமும் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களை, பள்ளி இயக்குநா் த. சோழராஜன், தாளாளா் சோ. மகேஸ்வரி, முதல்வா் பா்வீன் பானு பாராட்டினா்.