மின்கம்பத்திலிருந்து தவறி விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்ததில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பாப்பாக்குடி அருகே இலந்தைகுளத்தைச் சோ்ந்த சோ்க்கனி மகன் களஞ்சியம் (32). இவா், சொந்தமாக சவுண்ட் சா்வீஸ் தொழில் செய்து வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை காலை அந்தப் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் ஏறியபோது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்ததும் போலீஸாா் அங்குசென்று சடலத்தை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். உயிரிழந்த களஞ்சியத்துக்கு மனைவி, 6 வயதில் மகன் ஆகியோா் உள்ளனா். இதுகுறித்து, பாப்பாக்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.