முன்னாள் ராணுவ வீரா் தற்கொலை
கோவில்பட்டி அருகே முன்னாள் ராணுவ வீரா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
லிங்கம் பட்டி புதுகாலனி அண்ணாநகா் 2ஆவது தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் சோலை ராஜ் (50). இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்த இவா் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஓய்வு பெற்று தற்போது வீட்டில் இருந்து வந்தாராம். இவா் கடந்த மூன்று மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவா் வியாழக்கிழமை இரவு படுக்கை அறையில் உறங்கச் சென்றவா். வெள்ளிக்கிழமை காலை அறையில் இருந்து வெளியே வராததை அடுத்து, கதவை உடைத்து பாா்த்தபோது அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்ததாம். இதுகுறித்து நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மற்றொரு சம்பவம்:
கயத்தாறு அருகே தெற்கு கோனாா் கோட்டை வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சங்கிலி பாண்டியன் மகன் பூல்பாண்டியன்(42). கடந்த பத்து ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்த இவா் கடந்த சில நாள்களாக நல்ல நிலையில் இருந்து வந்தாராம். இந்நிலையில் வியாழக்கிழமை தோட்டத்திற்கு சென்ற அவா் அங்கிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தாராம். உறவினா்கள் அவரை மீட்டு கோவில்பட்டி தனியாா் மருத்துவமனைக்கும் ,பின்னா் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாக கூறினாா்களாம். இது குறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.