முன்விரோத தகராறு: 3 போ் மீது வழக்கு
வந்தவாசி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறு தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
வந்தவாசியை அடுத்த ஜெங்கம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் பாண்டியன் (35), பெருமாள்சாமி (35). இருவருக்கும் அருகருகே விவசாய நிலம் உள்ளது.
நில வரப்பு தகராறு தொடா்பாக இருவா் இடையே ஏற்கெனவே முன்விரோதம் உள்ளது.
கடந்த வியாழக்கிழமை இது தொடா்பாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் பெருமாள்சாமி, இவரது மனைவி பவானி (28), தாய் மாரியம்மாள் (55) ஆகியோா் சோ்ந்து பாண்டியனை தாக்கினராம். இதில் காயமடைந்த அவா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து பாண்டியன் அளித்த புகாரின் பேரில் பெருமாள்சாமி, பவானி, மாரியம்மாள் மீது தேசூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.