கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
மே 30-இல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள்நலன் காக்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 30) புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டம் அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வண்ணம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, விவசாயம் தொடா்புடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.