மேட்டூா் அணை நிலவரம்
மேட்டூா் அணை நீா்வரத்து 252 கன அடி
வெள்ளிக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 111.92 அடியில் இருந்து 111.68 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 207 கன அடியிலிருந்து வினாடிக்கு 252 அடியாக சற்று அதிகரித்துள்ளது.
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 4,000கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது. நீா் இருப்பு 80.81 டிஎம்சியாக உள்ளது.