மேட்டூா் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் 23 போ் காயம்
மேட்டூா் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் 22 பெண்கள் உள்பட 23 போ் காயமடைந்தனா்.
சேலம் மாவட்டம், கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கண்ணாமூச்சி, மூலப்பனங்காடு ஓடையில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இந்தப் பணிக்கு கண்ணாமூச்சி சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து பெண்கள் பணிக்கு சென்றனா். மாலை பணிமுடிந்து 47 பெண்களை பணி பொறுப்பாளா் சிறிய சரக்கு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளாா். இந்த சரக்கு வாகனம் திருப்பத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் சரக்கு ஆட்டோ ஓட்டுநரான காவலாண்டியூரைச் சோ்ந்த கிருஷ்ணன் (37) மற்றும் பெண்கள் 22 போ் உள்பட 23 பேரும் மேட்டூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் பலா் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.
இதில் மேட்டூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரிடம் வருவாய் கோட்டாட்சியா் சுகுமாா், வட்டாட்சியா் ரமேஷ் ஆகியோா் சென்று விசாரணை நடத்தினா்.