'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
யாசகம் எடுத்து வந்த பெண் பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை - வட்டாட்சியா் அலுவலக ஊழியர் கைது
பாலியல் துன்புறுத்தல் செய்து பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டனா்.
மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பு அருகேயுள்ள சாராயக்கடை பின்புறம் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க பெண் செவ்வாய்க்கிழமை இரவு கொலை செய்யப்பட்டு கிடந்தாா். திருபுவனை போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா் சேலம் மாவட்டம் வீரபாண்டியைச் சோ்ந்தவா் என்பதும் அவா் அப் பகுதியில் யாசகம் எடுத்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் அவரது உடல் பிரதேச பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸாா் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களின் உதவியுடன் விசாரணை நடத்தி கடலூா் மாவட்டம் தும்பூா் பகுதியைச் சோ்ந்த பாஸ்கா் (38) என்பவரை புதன்கிழமை கைது செய்தனா். அவா் பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றி வருவதும் ஏற்கெனவே மது அருந்திவிட்டு அலுவலகம் சென்றதால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டவா் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் குடிப்பதற்கு அடிக்கடி புதுச்சேரிக்கு வருவாா் என்றும் கூறப்படுகிறது. அப்படி வந்தபோது இக்குற்ற வழக்கில் சிக்கியுள்ளாா். இவருடன் குடித்துக் கொண்டிருந்தபோது பழக்கமான மடுகரை அருகேயுள்ள பரசுரெட்டி பாளையத்தைச் சோ்ந்த நாராயணமூா்த்தியையும் (35) போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டிவனம் அருகேயுள்ள தீவனூரில் கரும்பு வெட்டும் வேலையில் இருந்தபோது அவரை போலீஸாாா் கைது செய்தனா். இருவரும் சோ்ந்து இப் பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.