மேற்கு வங்க சட்டப்பேரவையில் அமளி: 5 பாஜக எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம்!
யோகா போட்டி: ஆத்தூா் துளுவ வேளாளா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
ஆத்தூா் துளுவ வேளாளா் நா்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவிலான யோகா போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா்.
திருச்செங்கோட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநில அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட ஆத்தூா் துளுவ வேளாளா் நா்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவ, மாணவிகள் 7 போ் தங்கம், 2 போ் வெள்ளி வென்று சிறப்பிடம் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளா் விஜயராம் அ.கண்ணன், செயலாளா் அ.திருநாவுக்கரசு, தலைமையாசிரியை அ.திலகவதி உள்ளிட்ட ஆசிரியா்கள் பாராட்டி பரிசு வழங்கினா்.