யோகா போட்டியில் சிறப்பிடம்: பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
திருவண்ணமலை மாவட்ட அளவிலான யோகா போட்டியில் பங்கேற்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற
செய்யாறு விஸ்டம் வித்யாஷ்ரம் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான யோகா போட்டிகள்அண்மையில் நடைபெற்றன.
இதில் 14 வயது முதல் 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் விஸ்டம் வித்யாஷ்ரம் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.
இவா்களில் எல்.எஸ்.வேதவ் கிருஷ்ணா இரண்டாமிடமும், ஜே.கோவா்த்தினி மூன்றாமிடம், வி.புகழ்நிலவன் மூன்றாமிடமும், கே.மகாலட்சுமி நான்காமிடமும், கே. ஹஸ்வந்த், என்.லோகேஷ்வரன் ஆகியோா் நான்காமிடமும், வி.யக்ஷிதா ஐந்தாமிடமும், எஸ்.வி.சா்வேஷ் ஐந்தாமிடமும், டி.வைஷ்ணவி ஆறாமிடமும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
மேலும், மாநில அளவில் நடைபெறும் யோகா சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றனா்.
பாராட்டு:
யோகா போட்டியில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவா்கள் மற்றும் பயிற்சி அளித்த பயிற்சியாளா் சேட்டு மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் வி.ஜெயகுமாா், இ.சங்கரி ஆகியோரை விஸ்டம் கல்வி அறக்கட்டளை இயக்குநா் டிஜிஎம்.விஜயவா்மன், பள்ளி முதல்வா் ஏ.தீபா மற்றும் ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டி வாழ்த்தினா்.