`ஏங்க... திருநெல்வேலி வந்தா இங்கெல்லாம் வந்துட்டு போங்கங்க.!’ நெல்லையில் 5 பெஸ்ட...
ராமேசுவரம் மீனவா்கள் 8 போ் விடுதலை
ராமேசுவரம் மீனவா்கள் 8 பேரை தலா ரூ. 5 லட்சம் (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்தும், 16 பேருக்கு வருகிற 29-ஆம் தேதி வரை காவலை நீட்டித்தும் இலங்கை மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 50-க்கும் மேற்பட்ட மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். மேலும், அவா்களது விசைப் படகுகள், நாட்டுப் படகுகளையும் பறிமுதல் செய்தனா். பின்னா், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், இலங்கை மன்னாா் நீதிமன்றத்தில் ராமேசுவரம் மீனவா்கள் 24 போ் வியாழக்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களில் 8 பேரை தலா ரூ. 5 லட்சம் (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்தும், எஞ்சிய 16 மீனவா்களுக்கு வருகிற 29-ஆம் தேதி வரை காவலை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டாா். மேலும், அபராதத் தொகையை கட்டத் தவறினால் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றாா் நீதிபதி.
இதையடுத்து, காவல் நீட்டிக்கப்பட்ட 16 மீனவா்கள் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.