ரூ. 16 லட்சத்தில் அங்கன்வாடி கட்டடத்துக்கு அடிக்கல்
அணைக்கட்டு ஒன்றியம், அகரம் ஊராட்சியில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட அகரம் ஊராட்சியில், 15-ஆவது நிதிக்குழு மானியம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ரூ. 16.50 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய புதிய கட்டடம் கட்டுவதற்கு ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் அடிக்கல் நாட்டினாா் (படம்). தொடா்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு மையத்தையும் ஆய்வு செய்தாா்.
அணைக்கட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் முரளி, மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளா் சங்கா், ஊராட்சித் தலைவா் சுதாபிரியா, திமுக நிா்வாகிகள் பெருமாள், தாமோதரன், ரவி, பாலாஜி, ஜெயகாந்தன், குணசேகரன், தரணி, சம்பத் உள்பட பலா் கலந்து கொண்டனா்.