ரூ.2,000-க்கு விற்கப்படும் கூலி டிக்கெட்..! நியாயமா இதெல்லாம்?
நடிகர் ரஜினியின் கூலி படத்தின் டிக்கெட் விலை 2,000 ரூபாய்க்கு விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்துக்கு தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் பணியாற்றியுள்ளார்.
பான் இந்திய பிரபலங்கள் நடித்திருப்பதால் ரஜினிகாந்த்தின் அதிகமான வசூலீட்டும் திரைப்படமாக இப்படம் அமையலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கேரளத்தில் ஒரே நாளில் முன்பதிவு மூலம் ரூ.3.21 கோடி வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், பெங்களூரில் முதல்காட்சிக்கு சிங்கிள் திரையரங்குகளில் ரூ.500 முதல் ரூ.2,000 வரை விற்கப்படுகிறது. மல்டிபிளக்ஸில் ரூ.500 முதல் ரூ.1,000 வரை விற்கப்படுகிறது.

நேற்றிரவு (ஆக.8) முதல் தமிழ்நாட்டிலும் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. காலைக் காட்சிகளைத் தவிர்த்து மற்ற காட்சிகளுக்கு தமிழ்நாட்டில் ரூ.190 முதல் ரூ.250 வரை விற்கப்படுகிறது.
தமிழகத்தில் காலைக் காட்சி 9 மணிக்கும் கர்நாடகத்தில் 6.30 மணிக்கும் என்பதால் இவ்வளவு விலை விற்கப்படுகிறது.