ரூ.9.90 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி ஆய்வு
ஆம்பூரில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆம்பூா் சுண்ணாம்புக் காளவாய் பகுதியில் ரூ.9.90 லட்சத்தில் நகராட்சி சாா்பாக சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்ன்றன. அப்பணியை நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பணியை தரத்துடன் மேற்கொண்டு விரைந்து முடிக்க வேண்டுமென ஒப்பந்தாரருக்கு அறிவுறுத்தினாா்.