செய்திகள் :

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

post image

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூலை 8) அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் வருகிற ஜூலை 20 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூலை 8) அறிவித்துள்ளது.

காயம் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் மற்றும் ஆல்ரவுண்டர் ஷதாப் கான் இருவரும் அணியில் இடம்பெறவில்லை.

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி விவரம்

சல்மான் அகா (கேப்டன்), அப்ரார் அகமது, அகமது டேனியல், ஃபாஹீம் அஷ்ரஃப், ஃபகர் ஸமான், ஹாசன் நவாஸ், ஹுசைன் டாலட், குஷ்தில் ஷா, அப்பாஸ் அஃப்ரிடி, முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், சஹிப்ஸதா ஃபர்கான், சைம் ஆயுப், சல்மான் மிர்ஸா, சூஃபியன் முக்யூம்.

இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் விவரம்

முதல் டி20 - ஜூலை 20, டாக்கா

2-வது டி20 - ஜூலை 22, டாக்கா

3-வது டி20 - ஜூலை 24, டாக்கா

The Pakistan Cricket Board announced the Pakistan squad for the T20 series against Bangladesh today.

இதையும் படிக்க: 3-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கஸ் அட்கின்சன் சேர்ப்பு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ... மேலும் பார்க்க

மிட்செல் ஸ்டார்க் ஒரு போர் வீரன்..! 100-ஆவது போட்டிக்கு கம்மின்ஸ் புகழாரம்!

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது 100-ஆவது டெஸ்ட் போட்டியை விளையாடவிருக்கிறார். 35 வயதாகும் இடது கை வேகப் பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் 99 டெஸ்ட் போட்டிகளில் வி... மேலும் பார்க்க

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூலை 8) அறிவித்துள்ளது.வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் வ... மேலும் பார்க்க

சதம் விளாசிய குசல் மெண்டிஸ்; வங்கதேசத்துக்கு 286 ரன்கள் இலக்கு!

வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் எடுத்துள்ளது.வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு... மேலும் பார்க்க

30 ஆண்டுகளாக ஃபிராங்க் வோரல் கோப்பையை தக்கவைத்து ஆஸி. ஆதிக்கம்!

ஆஸி. அணி 30 ஆண்டுகளாக ஃபிராங்க் வோரல் கோப்பையை தக்கவைத்து சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளுடன் விளையாடும் டெஸ்ட் போட்டிக்கு ஃபிராங்க் வோரல் கோப்பை எனப் பெயரிடப்பட்டது. மேற்கிந்த... மேலும் பார்க்க

இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற தென்னாப்பிரிக்கா!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவ... மேலும் பார்க்க