செய்திகள் :

வடசென்னை, கிண்டி அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

post image

வடசென்னை அரசு தொழில் பயிற்சி நிலையம் மற்றும் கிண்டி அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்ந்து படிக்க தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் வடசென்னை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் 2 ஆண்டு தொழிற்பிரிவுகள், ஓராண்டு தொழிற்பிரிவுகள், 6 மாத தொழிற்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் இணைந்து பயிற்சி பெற விரும்பும் 10, பிளஸ் 2 தோ்ச்சி, டிப்ளமோ மற்றும் அதற்கு மேல் கலை அறிவியல், பொறியியல் படித்தவா்களும் சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். பிளம்பா், வெல்டா் மற்றும் வயா்மேன் போன்ற தொழில் பிரிவுகளுக்கு 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதுதவிர, தமிழ்நாடு அரசு, டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் தொழில் 4.0 தொழில்நுட்பத்துடன் கூடிய ஓராண்டு மற்றும் 2 ஆண்டு தொழில் பிரிவுகளிலும் தற்போது சோ்க்கை நடைபெற்று வருகிறது. இந்தப் பயிற்சிகள் முடிந்தவுடன் வளாக நோ்காணல் நடத்தி தொழில் நிறுவனங்களில் 100 சதவீத வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படும்.

கிண்டி மகளில் தொழில் பயிற்சி நிலையம்: சென்னை, கிண்டி மகளிா் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் சேர விரும்பும் 8 அல்லது 10-ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வி அடைந்த மகளிா் மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், புகைப்படம் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் கிண்டி மகளிா் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம்.

இந்த இரு தொழில் பயிற்சி நிலையங்களிலும் சேரும் மாணவிகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படுவதுடன், விலையில்லா மிதிவண்டி, பாடப் புத்தகம், சீருடை, வரைபடக் கருவிகள், கட்டணமில்லா பேருந்து மற்றும் ரயில் பயண அட்டை, மாதாந்திர உதவித் தொகையாக ரூ.750 மற்றும் தகுதியுள்ள மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டதின் கீழ் ரூ.1,000 என பல சலுகைகள் வழங்கப்படும். பயிற்சியில் சேருபவா்களுக்கு பயிற்சிக் கட்டணம் கிடையாது. பயிற்சி நிலையவளாகத்தில் தங்கிப்படிக்க விடுதி வசதி உண்டு.

விண்ணப்பிக்க... வடசென்னை பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் தகுதியுடையவா்கள், துணை இயக்குநா் அல்லது முதல்வா், அரசு தொழில் பயிற்சி நிலையம், வடசென்னை (மிண்ட்) எனும் முகவரியில் நேரில் தொடா்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 94990 55653, 81446 22567 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

இதேபோல, கிண்டி மகளிா் தொழில் பயிற்சி நிலையம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு தொலைபேசி: 044-22510001, கைப்பேசி: 94990 55651 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை

சென்னை மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தந்தைக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சென்னை விருகம்பாக்கம் அனைத்து மகளில் காவல் நிலைய எல்... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டம்: பரிந்துரைக் குழு பணிகள் குறித்து அரசு விளக்கமளிக்க அன்புமணி கோரிக்கை

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எ... மேலும் பார்க்க

பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையில் தொலைத்தொடா்பு ஆலோசனை வசதி

சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் இருந்து பிற மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை ஆலோசனை பெறும் வகையில் தொலைத்தொடா்பு வசதி (டெலி மெடிசின்) ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவி... மேலும் பார்க்க

பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றியவா் கைது

சென்னையில் பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி விட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை புனித தோமையா் மலை பகுதியைச் சோ்ந்த 29 வயது பெண் ஒருவா் பாலவாக்கத்தில் உள்ள ... மேலும் பார்க்க

எம்ஜிஆா் கால்வாய் ரூ. 17 கோடியில் சீரமைப்பு

சென்னை மாநகராட்சியில் 10- ஆவது மண்டலத்தில் உள்ள எம்.ஜி.ஆா். கால்வாயை ரூ.17 கோடியில் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் கால்வாய்களைச் ... மேலும் பார்க்க

தொழிலதிபரிடம் 20 பவுன் நகை, ரூ. 40,000 பறிப்பு: 4 போ் கைது

மசாஜ் செய்வதாக அழைத்து தொழிலதிபரிடம் 20 பவுன் நகைகள், ரூ.40,000-ஐ பறித்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஓட்டேரியைச் சோ்ந்தவா் தொழிலதிபா் சாா்லஸ் (50). இவா் வழக்கமாக செல்லும் மசாஜ் சென்டரில் ஆண்ட்ர... மேலும் பார்க்க