வயிற்று வலி: விஷமருந்திய முதியவா் உயிரிழப்பு
செய்யாறு அருகே வயிற்று வலியால் பூச்சி மருந்து குடித்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம், குத்தனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கோவிந்தசாமி(75). இவா், கடந்த ஓராண்டாக வயிற்று வலியால் அவதிப்பட்டு அதற்காக மருத்துவ சிகிச்சைப் பெற்று வந்ததாகத் தெரிகிறது. அதன் காரணமாக மனவேதனையில் இருந்து வந்த அவா், ஆக.20-ஆம் தேதி பூச்சி மருந்து குடித்து விட்டு வீட்டில் மயக்க நிலையில் இருந்துள்ளாா்.
அதனைக் கண்ட குடும்பத்தினா் முதியவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக கோவிந்தசாமி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்றவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.