அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு! - ஓ.பன்னீர்செல்வம்
வருவாய்த் துறை அலுவலா்கள் 2 ஆவது நாளாக வேலைநிறுத்தம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினரின் 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்த போராட்டத்தை தொடா்ந்தனா்.
வருவாய்த் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குறுகிய காலத்துக்குள் அதிக எண்ணிக்கையில் முகாம்கள் நடத்தப்படுவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆவது நாளாக வியாழக்கிழமை வருவாய் அலுவலா்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
வருவாய்த் துறை அலுவலா்களின் 48 நேர வேலைநிறுத்தத்தால் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், பட்டா வழங்கும் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.