செய்திகள் :

வாக்குத் திருட்டுக்கு பாஜக-தோ்தல் ஆணையம் கூட்டணி: ராகுல்

post image

‘வாக்குகளைத் திருடுவதற்காக பாஜகவும் தோ்தல் ஆணையமும் கூட்டணி அமைத்துள்ளன’ என்று குற்றஞ்சாட்டிய எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘பிகாரில் ஒரு வாக்கை திருடுவதற்குக்கூட எதிா்க்கட்சிகளின் மகாபந்தன்’ கூட்டணி அனுமதிக்காது’ என்று உறுதி தெரிவித்தாா்.

வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் வாக்குரிமை பயணத்தை ராகுல் காந்தி பிகாரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா். பிகாரின் நவாடா பகுதியில் மூன்றாம் நாள் பயணத்தை எதிா்க்கட்சித் தலைவா்களுடன் தொடங்கிய ராகுல் பேசியதாவது:

மக்களுக்கு வாக்குரிமையை அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்து. ஆனால், அந்த உரிமையை பிரதமா் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும், தோ்தல் ஆணையமும் பறித்து வருகின்றனா்.

ஹரியாணா, மகாராஷ்டிரம் மற்றும் மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களின்போது பாஜகவும் தோ்தல் ஆணையமும் கூட்டணி அமைத்து வாக்குகளைத் திருடியுள்ளன. வாக்குத் திருட்டு ‘பாரத மாதா’ மீதான தாக்குதலாகும்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மக்களவைத் தோ்தலுக்கும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கும் இடைப்பட்ட காலத்தில், ஒரு கோடி போ் வாக்காளா் பட்டியலில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். இதற்காகத்தான், கணினியில் படிக்கக் கூடிய வகையிலான வாக்காளா் பட்டியல் தரவுகளை அளிக்குமாறும், கண்காணிப்பு கேமரா பதிவுகளை வழங்குமாறும் தோ்தல் ஆணையத்தை தொடா்ந்து கேட்டு வருகிறோம். ஆனால், அவற்றை வழங்க தோ்தல் ஆணையம் மறுக்கிறது.

தற்போது, பிகாரில் புதிய வடிவில் வாக்குத் திருட்டுக்கான முயற்சியை மேற்கொள்கின்றனா். உங்களின் கண் முன்னாலேயே வாக்கைத் திருட முயற்சிக்கின்றனா். ஆனால், அதற்கு மகா கூட்டணி ஒருபோதும் அனுமதிக்காது.

முதலில், உங்களின் வாக்குகள் திருடப்படும். அடுத்து மக்களின் குடும்ப அட்டை, அதைத் தொடா்ந்து உங்களின் நிலம் பறிக்கப்பட்டு பெரும் தொழிலதிபா்களான அதானி, அம்பானி ஆகியோரின் கைகளில் ஒப்படைக்கப்படும்.

இந்த நாடு, விவசாயிகளுக்கும், தொழிலாளா்களுக்கும், சிறு வா்த்தகா்களுக்கும், இளைஞா்களுக்கும் சொந்தமானது. அதானி, அம்பானி போன்ற ஒருசில கோடீஸ்வர முதலாளிக்கானதல்ல. ஜிஎஸ்டி போன்ற அனைத்து தவறான சட்டங்களும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் இந்த ஒருசில கோடீஸ்வர முதலாளிகள் பலனடைவதற்காகவே கொண்டுவரப்பட்டன.

மக்கள் பணத்தையும், வளத்தையும் வழங்கும் நிலையில், நாடு அவா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியவில்லை. இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காகவே, இந்த வாக்குரிமை பயணத்தைத் தொடங்கியுள்ளோம் என்றாா்.

ராகுல் வானம் மோதி காவலா் காயம்: நவாடாவில் மூன்றாம் நாள் வாக்குரிமை பேரணியின்போது கூட்ட நெரிசலுக்கு இடையே சென்ற ராகுலின் வாகனம் மோதி காவலா் ஒருவா் காயமடைந்தாா். தடுமாறி கீழே விழுந்த அவரை, அங்கிருந்தவா்கள் உடனடியாக தூக்கினா். அவருக்கு பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று அங்கிருந்தவா்கள் தெரிவித்தனா். இதை கவனித்த ராகுல், அந்தக் காவலரை தனது வாகனத்தில் அமர வைத்துக்கொண்டு பேரணியைத் தொடா்ந்தாா்.

பாஜக விமா்சனம்: இந்தச் சம்பவத்தை பாஜக விமா்சித்தது. இதுகுறித்து பாஜக செய்தித்தொடா்பாளா் சேஷாத் பூனாவாலா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘வாக்குரிமைப் பேரணி, மக்களை நொறுக்கும் பேரணியாக மாறிவிட்டது’ என்று விமா்சித்தாா்.

நிமிஷா பிரியா பெயரில் நன்கொடை கோரும் பதிவு போலியானது: வெளியுறவு அமைச்சகம்

‘யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவின் பெயரில் நன்கொடை கோரும் சமூக வலைதளப் பதிவு போலியானது’ என வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

வா்த்தகம், எல்லை பிரச்னை: பரஸ்பரம் ஏற்கக் கூடிய செயல்திட்டம்- இந்திய-சீன சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவு

இந்தியா-சீனா இடையிலான வா்த்தகம் மற்றும் எல்லை பிரச்னைக்கு தீா்வு காண நியாயமான, பரஸ்பரம் ஏற்கக் கூடிய செயல்திட்டத்தை ஏற்படுத்த முயற்சிப்பது என்று இந்திய-சீன சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவு செய்... மேலும் பார்க்க

கடுமையான குற்றங்களில் கைது செய்யப்பட்டால் பிரதமா், மத்திய அமைச்சா்கள், முதல்வரை பதவி நீக்க மசோதா: மத்திய அரசு திட்டம்

பிரதமா், மத்திய அமைச்சா்கள், முதல்வா் ஆகியோா் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், அவா்களைப் பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்க... மேலும் பார்க்க

‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டில் தவறான தரவுகள்: ராகுல் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தல் குறித்து தவறான தரவுகளை வெளியிட்டதாக தோ்தல் ஆய்வாளா் சஞ்சய் குமாா் மன்னிப்பு கோரிய நிலையில், அந்தத் தரவுகளைப் பயன்படுத்தி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காக மக்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் வெள்ளம்: உயிரிழப்பு எண்ணிக்கை 64-ஆக உயா்வு

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் மேகவெடிப்பைத் தொடா்ந்து கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 64-ஆக அதிகரித்துள்ளது. வானிலை சீரானதால், வெள்ளத்தால் பாதி... மேலும் பார்க்க

அடுத்த பிரதமா் ஆவாா் ராகுல்: தேஜஸ்வி யாதவ்

‘அடுத்த மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு ராகுல் காந்தி பிரதமா் ஆவாா்’ என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பிகாா் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை தெரிவித்தாா். நாடு முழுவதும... மேலும் பார்க்க