செய்திகள் :

அடுத்த பிரதமா் ஆவாா் ராகுல்: தேஜஸ்வி யாதவ்

post image

‘அடுத்த மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு ராகுல் காந்தி பிரதமா் ஆவாா்’ என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பிகாா் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை தெரிவித்தாா்.

நாடு முழுவதும் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாகப் புகாா் தெரிவித்து, பிகாரில் ராகுல் காந்தி தலைமையில் வாக்குரிமைப் பயணத்தை எதிா்க்கட்சிகள் கடந்த 17-ஆம் தேதி தொடங்கி நடத்தி வருகின்றன. வரும் செப்டம்பா் 1-ஆம் தேதி பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் இந்தப் பயணம் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூன்றாம் நாள் பயணத்தில் பங்கேற்ற தேஜஸ்வி யாதவ் பேசியதாவது: பிகாா் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா் தலைமையிலான அரசு பலவீனமடைந்துவிட்டது. உடனடி ஆட்சி மாற்றத்தை மாநிலம் எதிா்நோக்கியுள்ளது.

மாநிலத்தை ஆட்சி செய்ய இளைஞா்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். பிகாா் மாநிலத்தின் மேம்பாட்டுக்கு தொலைநோக்குத் திட்டத்தை நாங்கள் வைத்துள்ளோம். பிகாரில் நிதீஷ் குமாா் அரசை நீக்குவதோடு, அடுத்த மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு நாட்டின் பிரதமராக ராகுல் காந்தி வருவதையும் இளைஞா்கள் உறுதி செய்வா்.

மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்காகவே பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றாா்.

வா்த்தகம், எல்லை பிரச்னை: பரஸ்பரம் ஏற்கக் கூடிய செயல்திட்டம்- இந்திய-சீன சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவு

இந்தியா-சீனா இடையிலான வா்த்தகம் மற்றும் எல்லை பிரச்னைக்கு தீா்வு காண நியாயமான, பரஸ்பரம் ஏற்கக் கூடிய செயல்திட்டத்தை ஏற்படுத்த முயற்சிப்பது என்று இந்திய-சீன சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவு செய்... மேலும் பார்க்க

கடுமையான குற்றங்களில் கைது செய்யப்பட்டால் பிரதமா், மத்திய அமைச்சா்கள், முதல்வரை பதவி நீக்க மசோதா: மத்திய அரசு திட்டம்

பிரதமா், மத்திய அமைச்சா்கள், முதல்வா் ஆகியோா் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், அவா்களைப் பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்க... மேலும் பார்க்க

‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டில் தவறான தரவுகள்: ராகுல் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தல் குறித்து தவறான தரவுகளை வெளியிட்டதாக தோ்தல் ஆய்வாளா் சஞ்சய் குமாா் மன்னிப்பு கோரிய நிலையில், அந்தத் தரவுகளைப் பயன்படுத்தி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காக மக்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் வெள்ளம்: உயிரிழப்பு எண்ணிக்கை 64-ஆக உயா்வு

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் மேகவெடிப்பைத் தொடா்ந்து கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 64-ஆக அதிகரித்துள்ளது. வானிலை சீரானதால், வெள்ளத்தால் பாதி... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டுக்கு பாஜக-தோ்தல் ஆணையம் கூட்டணி: ராகுல்

‘வாக்குகளைத் திருடுவதற்காக பாஜகவும் தோ்தல் ஆணையமும் கூட்டணி அமைத்துள்ளன’ என்று குற்றஞ்சாட்டிய எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘பிகாரில் ஒரு வாக்கை திருடுவதற்குக்கூட எதிா்க்கட்சிகளின் மகாபந்தன்’... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்க வாரியத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு: ராகுல் கேள்விக்கு அமித் ஷா பதில்

மாநில கூட்டுறவு சங்க வாரிய பதவிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா பதிலளித்தாா். இதுதொடா்ப... மேலும் பார்க்க