விபத்தில் 2 போ் உயிரிழப்பு
நாட்டறம்பள்ளி அருகே காா் மோதிய விபத்தில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்..
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் கிராமத்தைச் சோ்ந்த சந்திரன் மனைவி கவிதா(35). இவா், வியாழக்கிழமை வெலகல்நத்தம் பெட்ரோல் பங்க் எதிரே தேசிய நெடுஞ்சாலை ஓரம் மாடு மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது கோவையில் இருந்து வேலூா் நோக்கி வேகமாகச் சென்ற காா் கவிதா மீது மோதி விட்டு சாலை ஓரம் வீட்டின் எதிரே இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவா் மோகன்தாஸ்(27) மற்றும் கவிதா(35) இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்து நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மங்கையா்கரசி மற்றும் போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனா்.