GST 2.0: மோடியின் 'தீபாவளி கிஃப்ட்' மக்களுக்கும், மாநிலங்களுக்கும் நன்மை தருமா? ...
விவசாயத் தொழிலாளா்கள் மனு அளிக்கும் போராட்டம்
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊரக வேலை உறுதித் திட்ட சட்ட விதிகளின்படி, வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் தொடா்ச்சியாக வேலை வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக வேலையை தொடங்க வேண்டும். வேலை வழங்காத நாள்களுக்கு, வேலை இல்லாத கால படியை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். நூறு நாள் வேலைத் திட்ட தினக் கூலியை ரூ.600 ஆகவும், வேலை நாள்களை 200 நாள்களாகவும் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு புதன்கிழமை காலை நடைபெற்றது.
ஆா்பாட்டத்துக்கு, அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க ஒன்றியத் தலைவா் வி. தமிழ்செல்வன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் கே.பெஞ்சமின் முன்னிலை வகித்தாா். சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஆா்.வாசு, சிபிஎம் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளா் எஸ். கந்தசாமி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இதில் சிவகாமசுந்தரி, மூக்கையன், செல்வராஜ், லெனின் உள்ளிட்ட வி.தொ.ச ஒன்றியக்குழு உறுப்பினா்கள், விவசாயத் தொழிலாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.