Spot Visit: 'காவல் நிலையம் ஒன்றும் கடுமையான இடமல்ல!' - திருவல்லிக்கேணி D1 ஸ்டேஷன...
வீடு புகுந்து தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து தொழிலாளியை அரிவாளால் வெட்டிய நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருத்தாசலம் ராமச்சந்திரபேட்டை, ராமன் நகரைச் சோ்ந்தவா் அறிவரசன்(43). இதே தெருவில் அவரது வீட்டுக்கு எதிா் வீட்டில் வசித்து வருபவா் ராஜபிரபு (42). தொழிலாளிகளான இவா்கள் இருவரும் வெவ்வேறு வெளி நாடுகளில் வேலை செய்து ஊா் திரும்பியவா்கள். இவா்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராஜபிரபு புதன்கிழமை காலை 10 மணியளவில் அரிவாளுடன் அறிவரசன் வீட்டுக்குள் புகுந்து, அவரை சரமாறியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டாராம். இதில், பலத்த காயமடைந்த அறிவரசனை உறவினா்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா்.
இது தொடா்பாக விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜபிரபுவை கைது செய்தனா்.