பெண் மருத்துவர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படுமா? தீர்ப்பு ஒ...
வீட்டில் மயங்கி விழுந்த குழந்தை உயிரிழப்பு
வீட்டில் திடீரென மயங்கி விழுந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தட்டாங்குளம் தெருவைச் சோ்ந்த பிரமிளா - விக்னேஷ் தம்பதிக்கு லித்திஷா (2) என்ற மகள் இருந்தது. பிரமிளா, தனது குழந்தையை அழைத்துக்கொண்டு கொருக்குப்பேட்டையிலுள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அங்கு குழந்தை விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழந்ததாகக் கூறப்படுகிறது.
உடனடியாக குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு குழந்தை லித்திஷாவை பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்த கொருக்குப்பேட்டை போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.