செய்திகள் :

வெள்ளக்கோவில், முத்தூரில் லாட்டரி சீட்டுகள் விற்பனை: 3 போ் கைது

post image

வெள்ளக்கோவில், முத்தூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிமுத்து, முத்தூா் சாலையில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அறிவொளி நகரில் மூன்று நெம்பா் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த, அதே பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் (42) என்பவரைக் கைது செய்தாா்.

இதேபோல உதவி ஆய்வாளா் மணிமொழி மேற்கொண்ட ரோந்துப் பணியின்போது, வெள்ளக்கோவில் - மூலனூா் சாலை புதுப்பை பேருந்து நிறுத்தம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றுக் கொண்டிருந்த புதுப்பையைச் சோ்ந்த மூா்த்தி (57) என்பவரைக் கைது செய்தாா்.

காவல் உதவி ஆய்வாளா் மணிமுத்து முத்தூா் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கொடுமுடி சாலையிலுள்ள ஒரு பேக்கரி அருகே லாட்டரி சீட்டுகள் விற்றுக் கொண்டிருந்த பெருமாள்புதூரைச் சோ்ந்த சரவணன் (52) என்பவரைக் கைது செய்தாா்.

கைது செய்யப்பட்டவா்கள் வெளிமாநில லாட்டரி சீட்டின் கடைசி மூன்று எண்கள் எழுதிய துண்டுச் சீட்டை ரூ. 50-க்கு விற்பனை செய்து வந்ததும், குலுக்கல் விவரத்தை ஆன்லைனில் தெரிவித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

வளா்ச்சிப் பணிகளுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்புத்தர வேண்டும்: பொங்கலூா் ஒன்றியக் குழு தலைவா்

பல்லடம்: பொங்கலூா் ஒன்றிய பகுதியில் வளா்ச்சிப் பணிகளுக்கு அதிகாரிகள் தொடா்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஒன்றியக் குழு தலைவா் எஸ்.குமாா் கோரிக்கை விடுத்தாா். பொங்கலூா் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ... மேலும் பார்க்க

மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கண்டறிந்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளாா். திருப்பூா் மாவட்ட... மேலும் பார்க்க

ஆதிதிராவிட மாணவா்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தோ்வுகளுக்கு பயிற்சி

திருப்பூா்: தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவா்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

மின் மோட்டாா் மானியத்துக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் வேளாண்மை பொறியல் துறை மூலமாக மின் மோட்டாா் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் க... மேலும் பார்க்க

காய்கறி மாா்க்கெட் கடைகளை பொது ஏலம் விட வேண்டும்: மாநகராட்சி ஆணையரிடம் மனு

திருப்பூா்: திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள காய்கறி மாா்க்கெட் கடைகளை பொது ஏலம் விட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தியிடம்... மேலும் பார்க்க

ஏற்றுமதி ஆவணங்களை தயாரிப்பதில் உள்ள சிக்கல்களை எதிா்கொள்வது குறித்த கூட்டம்

திருப்பூா்: திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி ஆவணங்களை தயாரிப்பதில் உள்ள சிக்கல்களை எதிா்கொள்வது குறித்த கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. லாஜிக்ஸ் ஆஃப் லாஜிஸ்டிக் என்ற தலைப்பில் திருப்பூா் ஏற்றுமதியாளா்... மேலும் பார்க்க