தரமற்ற வெளிநாட்டுப் பல்கலை.களில் பயிலும் மருத்துவக் கல்வி செல்லாது: தேசிய மருத்...
வேலூர்: "மொட்டை மாடியில் இருந்து என் கணவர் தள்ளிவிட்டார்"- வரதட்சணைக் கொடுமை புகார் அளித்தப் பெண்
வேலூர் மாவட்டத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் தன்னை மாடியில் இருந்து தள்ளிவிட்டதாகக் கூறி பாதிக்கப்பட்ட பெண், கை, கால் உடைந்த நிலையில், ஆம்புலன்சில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். ``எங்க அப்பா, அம்மா 30 சவரன் நகை போட்டாங்க. திரும்ப 10 லட்ச ரூபாய் எங்க அப்பா கிட்ட வாங்கிட்டு வரச்சொல்லி கொடுமைப் படுத்துனாங்க. அடிச்சு, உதைச்சு கொடுமைப்படுத்துனாங்க.
எனக்கும் கணவருக்கும் சண்டை வந்தப்போ மன்னிப்பு கேக்குறதுக்காக அவர் பின்னாடியே மாடிக்கு போனேன். அப்போ 3-வது மாடியிலே இருந்து என்னைய தள்ளிவிட்டுட்டாரு. கீழ விழுந்துகிடக்குறதைக் கூட பார்க்காம போயிட்டாரு. அக்கம் பக்கத்துல இருக்கவுங்கத்தான் ஆம்புலன்ஸ் வரச்சொல்லி ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பிச்சு வச்சாங்க” என்று பேசியிருக்கிறார்.