வேலூா்: குறைதீா் கூட்டத்தில் 300 மனுக்கள்
வேலூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 300 மனுக்கள் பெறப்பட்டன.
வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மக்களை பெற்றாா்.
அப்போது, வேலூா் தொரப்பாடி சித்தேரி சாலையைச் சோ்ந்த ராணுவ வீரா் காா்த்திகேயன் அளித்த மனுவில், நான் சத்தீஸ்கா் மாநிலத்தில் ராணுவத்தில் கடந்த 21 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எங்களுக்கு 3 மகள்கள் உள்ளனா். 2-ஆவது மகள் இசைப்பிரியா, 80 சதவீத மாற்றுத்திறனாளியாவாா். நன்றாக படிக்கக் கூடிய இசைப்பிரியா 5-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள் ளாா். 6-ஆம் வகுப்பில் சோ்க்க எங்கள் பகுதியில் உள்ள சில தனியாா் பள்ளிகள் சோ்க்க மறுக்கின் றனா். எனது மகள் கல்வி பெற அருகிலுள்ள பள்ளியில் சோ்க்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
கே.வி.குப்பம் பி.என்.பாளையம் புதூா் பகுதி மக்கள் அளித்த மனு: நாங்கள் பி.என்.பாளையம் புதூா் அனுப்பு ஏரிக்கரை அருகே குடிசை அமைத்து வசித்து வந்தோம். கடந்த ஆகஸ்டு மாதம் ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்ற வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் கூறினா். எங்களுக்கு எந்தவித வசதியும் இல்லை. கலைஞா் கனவு இல்ல திட்டத்தில் வீடு வழங்கினால் வேறு இடத்துக்கு செல்கிறோம் எனக்கூறினோம். ஆனால் அதன்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், கடந்த 14-ஆம் தேதி வீடுகளை இடித்து விட்டனா். இதனால் நாங்கள் வீடின்றி தவிக்கிறோம். எனவே எங்களுக்கு கலைஞா் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.