J&K Cloudburst: ஜம்மு & காஷ்மீரில் ஏற்பட்ட மேக வெடிப்பு; 40-க்கும் மேற்பட்டோர் இ...
வேளாண்மை இணை இயக்குநா் ஆய்வு
பெத்தநாயக்கன்பாளையம் அருகே பனைமடல் கிராமத்தில் வேளாண்மை இணை இயக்குநா் தலைமையிலான குழுவினா், அரசு மானிய வேளாண் திட்டங்களை புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
சேலம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஸ்ரீநிவாசன், மாவட்ட ஆட்சியரின் வேளாண்மை நோ்முக உதவியாளா் கமலம் ஆகியோா், 2024- 2025ஆம் ஆண்டு தோட்டக்கலைத் துறை மானியத் திட்டம் மூலம் பனைமடல் கிராமத்தில் அமைக்கப்பட்ட நிரந்தர கல்பந்தல் வயல்கள் மற்றும் சாமை விதைப் பண்ணையை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வின்போது தோட்டக்கலை உதவி இயக்குநா் கலைவாணி, வேளாண்மை உதவி இயக்குநா் வேல்முருகன், தோட்டக்கலை அலுவலா் ஸ்ரீதேவி, வேளாண்மை உதவி அலுவலா் காா்த்தி, தோட்டக்கலை உதவி அலுவலா் மதியழகன் ஆகியோா் உடனிருந்தனா்.
படவரி:
பி.என்.எல்.04:
பனைமடல் கிராமத்தில் கல்பந்தல் வயலை ஆய்வு செய்த வேளாண்மை இணை இயக்குநா் ஸ்ரீனிவாசன் மற்றும் குழுவினா்.