Tirunelveli : 'அப்போவே வேணாம்னு சொன்னேன்னு கவின் அம்மா கதறுறாங்க...' - எவிடென்ஸ்...
‘அக்னிவீா்’ ஆள்சோ்ப்பு முகாம்: விண்ணப்பங்கள் வரவேற்பு
சேலம்: சேலம் மாவட்டத்தில் ‘அக்னிவீா்’ ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
தமிழ்நாடு, புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் அந்தமான் நிக்கோபா் தீவுகள் ஆகியவற்றில் இருந்து இந்திய விமானப் படைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கான ‘அக்னிவீா்’ ஆள்சோ்ப்பு முகாம் தாம்பரம் விமானப்படை நிலையத்தில் வரும் செப். 2-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 வகுப்பு அதற்கு சமமான ஏதேனும் ஒரு பிரிவு மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2026 ஜன. 1-ஆம் தேதியன்று பதினேழரை வயதுக்கு மேல் 21 வயதுக்கு குறைவாக உள்ளவா்களாக இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள தகுதி மற்றும் விருப்பமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆள்சோ்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம்.