உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் ரூ.55.75 லட்சம்: நிரந்தர வைப்புத் தொகை சொத்து...
அதிரடியாக விளையாடுவதை ஆதரிப்பதாக நான் ஒருபோதும் கூறவில்லை: டேனியல் வெட்டோரி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிரடியாக விளையாடுவதை ஆதரிப்பதாக தான் ஒருபோதும் கூறவில்லை என அந்த அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டொரி தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடியான பேட்டிங் குறித்து பரவலாக பேசப்படுகிறது. ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் முதல் அணியாக 300 ரன்களைக் குவிக்கும் எனவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
இதையும் படிக்க: மகிழ்ச்சியாக இருக்க விரும்பியதால் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினேன்: விராட் கோலி
கடந்த ஐபிஎல் சீசனில் தொடர்ச்சியாக 200 ரன்களுக்கும் அதிகமாக குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இந்த சீசனில் அதிக முறை 200-ரன்களுக்கும் அதிகமாக குவிக்கவில்லை. அந்த அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் மற்றும் கிளாசன் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தும், அந்த அணியால் இம்முறை அதிக முறை 200 ரன்களுக்கும் அதிகமாக குவிக்க முடியவில்லை.
பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி கூறுவதென்ன?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிரயாக விளையாட வேண்டும் என்பதற்கு ஒருபோதும் ஆதரவு அளிக்கவில்லை எனவும், ஆட்டத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப விளையாடுவதையே ஆதரிப்பதாகவும் அந்த அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை ஆதரிப்பதாக நான் கண்டிப்பாக கூறவில்லை. சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் ஆட்டத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப விளையாடி ரன்கள் எடுக்கின்றனர். ஆனால், இந்த சீசனில் ஹைதராபாத் ஆடுகளம் எங்களைக் காட்டிலும் எதிரணிக்கே அதிகம் பொருத்தமானதாக இருந்தது.
இதையும் படிக்க: 15 ஆண்டுகள் சாபத்தை உடைத்து சாம்பியனான ஹாரி கேன்! விராட் கோலிக்கும் நடக்குமா?
ஒவ்வொரு போட்டி நிறைவடைந்த பிறகும் நான் ஒருபோதும் எங்களது அணியின் அதிரடியான பேட்டிங் அணுகுமுறையை ஆதரிப்பதாக கூறியதே இல்லை. போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுகிறோம் என்றே கூறினேன். ஆடுகளத்தின் தன்மை இந்த முறை நாங்கள் எதிர்பார்த்தது போன்று இல்லை என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 286 ரன்கள் என்ற இமாலய இலக்கை குவித்தது. அதன் பின், பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் 9 பந்துகள் மீதம் வைத்து 245 ரன்கள் என்ற இலக்கை துரத்திப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.