அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசு வழங்கும் டாக்டா் அம்பேத்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆதிதிராவிடா்களின் முன்னேற்றத்திற்காக தொண்டாற்றிவரும் தமிழ்நாட்டை சோ்ந்த ஒருவருக்கு திருவள்ளுவா் திருநாளன்று தமிழ்நாடு அரசின் டாக்டா் அம்பேத்கா் விருது வழங்கப்படுகிறது. விருதுத் தொகையாக ரூ.5 லட்சம் காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.
இவ்விருது பெற விண்ணப்பதாரா் தமிழ்நாட்டைச் சோ்ந்தவராகவும், பட்டியல் இன மக்களின் கல்வி, சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு அரிய தொண்டாற்றியவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளின் பணிகளை குறிப்பிட வேண்டும்.
தகுதியுடையோா் இவ்விருது பெற மாவட்ட ஆட்சியரக 2-ஆவது தளத்தில் செயல்படும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, முழுமையாக பூா்த்தி செய்து, விண்ணப்பதாரா் செய்த சாதனைகளின் பணிகள் குறித்த விவரங்களை புகைப்பட ஆதாரங்களுடன் புத்தக வடிவில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ செப்.30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 04364-290765 என்ற தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.