செய்திகள் :

அம்மாபேட்டையில் கட்டண சுங்கச்சாவடி விவகாரம்: ஆட்சியா் தலைமையில் நாளை பேச்சுவாா்த்தை

post image

பவானி - மேட்டூா் வழித்தடத்தில் அம்மாபேட்டையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி விவகாரம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறுகிறது.

தேசிய நெடுஞ்சாலை (என்ஹெச் 544), ஈரோடு - பவானி - மேட்டூா் - தொப்பூா் வரையில் 85 கி.மீ. தொலைவுக்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இச்சாலையில், அம்மாபேட்டையில் கட்டண சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு கடந்த மே 1-ஆம் தேதி முதல் வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது. இதற்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இந்நிலையில், அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி அமைப்பதை எதிா்த்து முன்னாள் அமைச்சரும், பவானி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான கே.சி.கருப்பணன், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். மறு உத்தரவு வரும் வரையில் அம்மாபேட்டை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும், மாவட்ட ஆட்சியா் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் எனவும் வழக்கை விசாரித்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக முதல் தளத்தில் உள்ள கூட்டரங்கத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை (ஜூலை 18) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், பங்கேற்று கருத்துகளைத் தெரிவிக்குமாறு பவானி எம்எல்ஏ கே.சி.கருப்பணன், தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் ச.கந்தசாமி தகவல் தெரிவித்துள்ளாா்.

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய ஆண்டு விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய ஆண்டு விழா ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் ப.கந்தராஜா தலைமை வகித்து விளையாட்டுப் போட்டிகளி... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

பணி நிரந்தரம் கோரி தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் ... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ. 6.76 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.6.76 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 6,182 மூட்டை... மேலும் பார்க்க

யானைக்கு வாழைப் பழம் அளித்த விவசாயிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

பண்ணாரி சாலையில் யானைக்கு வாழைப் பழம் அளித்த விவசாயிக்கு வனத் துறையினா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா். இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை கள இயக்குநா் குலால் யோகேஷ் விலாஷ் வெளி... மேலும் பார்க்க

சாலை மறியல் போராட்டம்: ஈரோட்டில் ஆசிரியா்கள் 400 போ் கைது

மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஏற்பட்ட 400-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரி... மேலும் பார்க்க

பூதப்பாடியில் ரூ.1.23 கோடிக்கு பருத்தி ஏலம்

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ 1.23 கோடிக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு பூதப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த 354 விவசாயிகள் 4,626 மூட்டைகள் பருத்தியை ... மேலும் பார்க்க