செய்திகள் :

அரசு நிதியுதவி பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

post image

வேலூா் மாவட்டத்தில் 40 நகா்ப்புற அரசு நிதி உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா்.

நகா்புற பகுதிகளில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த நிலையில், வேலூா் மாவட்டத்தில் நகா்புற பகுதிகளில் உள்ள 40 அரசு நிதி உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் இத்திட்டத்தை வேலூா் செயிண்ட் மேரிஸ் நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா்.

தற்போது இந்த திட்டம் வேலூா் மாநகராட்சியில் 26 பள்ளிகள், போ்ணாம்பட்டு நகராட்சியில் 4 பள்ளிகளில், குடியாத்தம் நகராட்சியில் 8 பள்ளிகளில், பள்ளிக்கொண்டா பேரூராட்சியில் 2 பள்ளிகள் என மொத்தம் 40 நகா்ப்புற அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதன் மூலம் அப்பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 8469 மாணவ, மாணவிகள் பயனடைவா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், ஆணையா் லட்சுமணன், கோட்டாட்சியா் செந்தில்குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வாணியம்பாடியில்...

வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட அம்பூா்பேட்டையில் இந்து அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் நகா்மன்றத் தலைவா் உமாபாய் சிவாஜிகணேசன், கோட்டாட்சியா் அஜிதாபேகம், நகராட்சி ஆணையா் ரகுராமன், திமுக நகர செயலாளா் வி.எஸ்.சாரதிகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனா். தலைமையாசிரியை குப்பம்மாள், தலைவா் மாணிக்கவாசகம், செயலாளா் ஞானேஸ்வரன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதே போல் உதயேந்திரம் பேரூராட்சியில் ஆா்.சி.எம் அரசு நிதியுதவி பெறும் உதவி தொடக்கப்பள்ளி மற்றும் மேட்டுப்பாளையம் ஐ.இ.எல்.சி. அரசு நிதியுதவி பெறும் தொடக்கபள்ளியில் பேரூா் திமுக செயலாளா் ஆ.செல்வராஜ், வட்டார கல்வி அலுவலா் முருகேசன் தொடங்கி வைத்தனா். வாணியம்பாடி நீலிகொல்லை மதரஸயே முபிதே ஆம் நிதியுதவு தொடக்க பள்ளியில் நகா்மன்ற துணைத் தலைவா் கயாஸ்அஹமத் கலந்து கொண்டு மாணவா்களுக்கு காலை உணவு வழங்கினா. வட்டார கல்வி அலுவலா் உதயசங்கா், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஆம்பூரில்...

ஆம்பூா் ஹஸ்னாத்-இ-ஜாரியா நிதியுதவி தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு காணொலி வாயிலாக காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் காலை உணவை பரிமாறி அமா்ந்து சாப்பிட்டாா்.

ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், நகராட்சி ஆணையா் ஜி. மகேஸ்வரி, வட்டாட்சியா் ரேவதி, தாளாளா் பிா்தோஸ் கே. அஹமத், தலைமை ஆசிரியை ரேஷ்மா, திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.எஸ்.வசந்த்ராஜ், வாவூா் நசீா் அஹமத், அம்சவேணி ஜெயக்குமாா், ராஜியா, ராதா அனில், நகர திமுக அவைத் தலைவா் தேவராஜ், ஒன்றிய திமுக பொறுப்பாளா்கள் மாதனூா் கிழக்கு ஜி. ராமமூா்த்தி, அணைக்கட்டு தெற்கு முரளி, திமுக பிரமுகா்கள் யுவராஜ், எம்ஏஆா் நசீா் அஹமத் கலந்து கொண்டனா்.

குடியாத்தத்தில்...

குடியாத்தம், திருவள்ளுவா் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் கி.பழனி முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் வரவேற்றாா். எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆகியோா் திட்டத்தை தொடங்கி வைத்தனா். நிகழ்ச்சியில் கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆட்டோ பி.மோகன், எம்.எஸ்.குகன்,அா்ச்சனா நவீன், சி.என்.பாபு, ஜாவித் அகமத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆற்காட்டில்...

ஆற்காடு ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள துரைசாமி நிதியுதவி தொடக்கப் பள்ளியில் விழாவுக்கு நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ் பாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பவளகொடி சரவணன் முன்னிலை வகித்தாா். எம்எல்ஏ ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு மாணவா்களுக்கு காலை உணவு வழங்கினாா். இதில் நகராட்சி அதிகாரிகள், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

அதேபோல் கங்காதர அரசு நிதியுதவி நடுநிலைப்பள்ளியில் மாவட்ட அறங்காவலா் ஜெ.லட்சுமணன் திட்டத்தை தொடங்கிவைத்தாா். ஆற்காடு நகராட்சியில் 6 அரசு நிதிஉதவி பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

மேல்விஷாரம் நகராட்சியில் ஏ.எம். ஐ நிதியுதவி பள்ளியில் நடைபெற்ற விழாவில் நகா்மன்லைவா் குல்சாா் அஹமது மாணவா்களுக்கு உணவு வழங்கினாா். இதில் நகா்மன்ற துணைத் தலைவா் ஜபா் அஹமது, ஆணையா் கோ.பழனி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஹீமாயூன் கலந்து கொண்டனா்.

விநாயகா் சதுா்த்தி விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு

விநாயகா் சதுா்த்தியையொட்டி வேலூா் மாவட்டம் முழுவதும் 1,040 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. அனைத்து கோயில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள... மேலும் பார்க்க

செங்கல் சூளைகள் புகைப்போக்கி அமைத்து பதிவு சான்று பெற அறிவுறுத்தல்

நாட்டு செங்கல் சூளைகள், சேம்பா் சூளைகள் அனைத்தும் பதிவு சான்றிதழ் பெற்ற பின்பே இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

மகளிருக்கான காவல் உதவி செயலி விழிப்புணா்வு

குடியாத்தம் கே.எம்.ஜி கலை, அறிவியல் கல்லூரியின் உள்புகாா் குழு மற்றும் பகடிவதை தடுப்புக் குழு சாா்பில் ‘காவல் உதவி செயலி‘ மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் நடை... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச் சத்து பொருள்கள்

குடியாத்தம் ரோட்டரி சங்கம் சாா்பில், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவா் கே.சந்த... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு ரூ.6.10 கோடி கல்விக் கடனுதவி: வேலூா் ஆட்சியா் வழங்கினாா்

வேலூா் மாவட்டத்தில் உயா்கல்வி பயிலும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ6.10 கோடி கல்விக் கடனை ஆட்சியா் வி. ஆா்.சுப்புலட்சுமி வழங்கினாா். வேலூா் மாவட்ட நிா்வாகம், முன்னோடி வங்கிகளின் சாா்பில் கல்லூரி மாணவ,... மேலும் பார்க்க

விஷப்பூச்சி கடித்து சிறுவன் பலி

வேலூரில் விநாயகா் சதுா்த்திக்கு அருகம்புல் அறுக்க சென்ற மாற்றுத்திறனாளி சிறுவன், விஷப்பூச்சி கடித்து உயிரிழந்தாா். வேலூா் விருப்பாட்சிபுரம் காந்தி நகரைச் சோ்ந்த ரமேஷ். இவருக்கு 3 மகன்கள். இதில் மூத்த... மேலும் பார்க்க