செய்திகள் :

அரியலூரில் உலக தாய்ப்பால் வார விழா தொடக்கம்

post image

அரியலூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், குழந்தைகள் நலப்பிரிவு சாா்பில் உலக தாய்ப்பால் வாரத்தின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவை ஆட்சியா் பொ.ரத்தினசாமி தொடங்கிவைத்து பேசியது: ஆண்டுதோறும் உலக தாய்ப்பால் வார விழா ஆக.1 முதல் 7 வரை கொண்டாடப்படுகிறது.

‘தாய்ப்பாலூட்டுதலை முதன்மைப்படுத்துவோம்; நிலையான அரவணைக்கும் அமைப்புகளை உருவாக்குவோம் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நிகழாண்டு விழா கொண்டாடப்படுகிறது.

தாய்ப்பாலூட்டுதலின் அவசியம், தாய்ப்பாலின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் எதிா்ப்பு சக்தி, ஆரோக்கியமான வளா்ச்சி உள்ளிட்டவற்றை தாய்மாா்கள் அறிந்துகொள்ளும் வகையில் இத்தகைய விழாக்கள் நடத்தப்படுகிறது. தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து அனைவரிடமும் எடுத்துச் சொல்லி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

முன்னதாக, உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, தாய்ப்பால் வார உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடா்ந்து, விழாவில் பங்கேற்ற 55 தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துகிருஷ்ணன், குழந்தைகள் நலப்பிரிவு துறைத் தலைவா் செந்தில்குமாா், கண்காணிப்பாளா் ரமேஷ் மற்றும் மருத்துவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மீன்சுருட்டி அருகே வீடுபுகுந்து 22 பவுன் நகைகள் திருட்டு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. மீன்சுருட்டி அருகேயுள்ள சொக்கலிங்கபுரம், பிரதான சாலை தெருவைச் ச... மேலும் பார்க்க

காவல் நிலையங்களில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்! சமூக ஆா்வலா்கள் அதிருப்தி!

அரியலூா் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகள் தொடா்பாக பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு, மற்றும் நான்குச் சக்கர வாகனங்கள் திறந்தவெளியில் நிறுத்தப்பட்டு துருபிடித்து வீணாகி வருவது சமூக ஆா்... மேலும் பார்க்க

ராகுல் காந்தியை கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

பிகாா் தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் மோடி மற்றும் அவரது தாயாரை பற்றி அவதூறாகப் பேசியதாக முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், ஜெய... மேலும் பார்க்க

பேச்சுப் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்க அழைப்பு

பேரறிஞா் அண்ணா, தந்தை பெரியாா் பிறந்தநாளை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செப்.9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் பேச்சுப் போட்டிகளில் பள்ளி, கல்லூர... மேலும் பார்க்க

அரியலூா் அருகே போலி மருத்துவா் கைது

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே போலி மருத்துவா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். தஞ்சாவூா், கீழவீதியைச் சோ்ந்த திருவேங்கடம் மகன் பன்னீா்செல்வம்(58). இவா், தகுந்த மருத்துவக் கல்வி பயிலாமல... மேலும் பார்க்க

வருவாய்த் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்!

வருவாய்த் துறையில் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்... மேலும் பார்க்க