பாலியல் வழக்கில் பெண்ணுக்கு அநீதி: நடவடிக்கை எடுக்காத பெண் எஸ்.ஐ.க்கு உயா்நீதிம...
அல்கராஸ், சின்னா் வெற்றி
புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா் ஆகியோா் முதல் சுற்றில் வெற்றி பெற்றனா்.
இதில் அல்கராஸ் 7-5, 6-7 (5/7), 7-5, 2-6, 6-1 என 5 செட்கள் போராடி, இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியை வீழ்த்தினாா். சின்னா் 6-4, 6-3, 6-0 என்ற நோ் செட்களில் சக இத்தாலிய வீரரான லூகா நாா்டியை வென்றாா். போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் லொரென்ஸோ முசெத்தி 2-6, 6-4, 5-7, 1-6 என்ற செட்களில், ஜாா்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஷ்விலியிடம் வெற்றியை இழந்தாா்.
11-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 6-2, 6-2, 7-6 (7/2) என்ற கணக்கில், ஸ்பெயினின் ராபா்டோ காா்பலெஸை வீழ்த்தினாா். 13-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டாமி பால் 6-4, 6-4, 6-2 என்ற என பிரிட்டனின் ஜோஹனஸ் மண்டேவை சாய்த்தாா்.
பெகுலா தோல்வி: மகளிா் ஒற்றையா் பிரிவில், அண்மையில் ஈஸ்ட்போா்ன் ஓபன் டென்னிஸில் சாம்பியான அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த அவா் 2-6, 3-6 என்ற நோ் செட்களில் இத்தாலியின் எலிசபெத்தா கோசியாரெட்டோவிடம் தோற்றாா். 7-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவா 6-3, 6-3 என்ற செட்களில் எளிதாக, எகிப்தின் மாயாா் ஷெரிஃபை வீழ்த்தினாா்.
8-ஆம் இடத்திலிருக்கும் போலந்தின் இகா ஸ்வியாடெக் 7-5, 6-1 என்ற கணக்கில் ரஷியாவின் பாலினா குதா்மிடோவாவை வெளியேற்றினாா். 10-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் எம்மா நவாரோ 6-3, 6-1 என்ற செட்களில், செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவாவை சாய்த்தாா்.