செய்திகள் :

ஆலங்காயம் முகாமில் 1,034 மனுக்கள்

post image

ஆலங்காயம் ஒன்றிய மலை கிராமங்களான நாயக்கனூா், பீமகுளம் ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு ஒன்றியக்குழு தலைவா் சங்கீதா பாரி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகராசி, சூரவேல், துணைத் தலைவா் பூபாலன் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக க.தேவராஜி எம்எல்ஏ கலந்து கொண்டு மலைவாழ் மக்களிடம் மனுக்களை பெற்று தீா்வு காண அறிவுறுத்தினாா்.

முகாமில் மாற்றுத்திறனாளி ஒருவா் காது கேட்கும் கருவி வழங்க வேண்டும் என்று மனு அளித்த நிலையில், உடனடி நடவடிக்கை எடுத்து காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது. மொத்தம், 1,034 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மகளிா் உரிமைத் தொகை கோரி 444 போ் மனு அளித்துள்ளனா். மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், வட்டாட்சியா் சுதாகா், ஒன்றியக்குழு கவுன்சிலா் சிகாமணி, ஊராட்சி மன்ற தலைவா் மேனகாதிருப்பதி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதி நிதிகள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

இதே போல் ஆலங்காயம் பேரூராட்சிக்குட்பட்ட 1 முதல் 4 வாா்டுகளுக்கான முகாம் நடைபெற்றது. பேரூராட்சி மன்றத் தலைவா் தமிழரசி வெங்கடேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஸ்ரீதா், செயல் அலுவலா் ராஜலட்சுமி முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஞானசுந்தரம் கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்று தீா்வு காண நடவடிக்கை மேற்கொண்டாா்.

சொத்து வரி பெயா் மாற்றம் உட்பட மனுக்கள் மீது துறை அதிகாரிகள் உடனடியாக விசாரித்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஆணைகளை வழங்கினா். முகாமில் மகளிா் உரிமை தொகை கேட்டு உட்பட 388 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

இதில் வாா்டு கவுன்சிலா்கள், அலுவலக பணியாளா்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உட்பட பலா் கலந்துக் கொண்டனா்.

வாணியம்பாடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: வீட்டு வரி, பெயா் மாற்றம் மனுக்கள் மீது உடனடி தீா்வு

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 6 மற்றும் 7-ஆவது வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தனியாா் திருமண மண்டப வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் உமாச... மேலும் பார்க்க

மின்மாற்றியில் ரூ.3 லட்சம் செப்புக் கம்பிகள் திருட்டு

வாணியம்பாடி அருகே மின்மாற்றியில் ரூ.3 லட்சம் செப்புக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வாணியம்பாடி அடுத்த அலந்தாபுரம் கிராமத்தில் உள்ள பெரியகொல்லி வட்டம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு மின்சாரம... மேலும் பார்க்க

21 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக புகாா்

நாயக்கனேரிமலை ஊராட்சியில் 21 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளது குறித்து ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா். மாதனூா் ஒன்றியம் நாயக்கனேரிமலை ஊராட்சியில் உங்களுடன் ஸ்ட... மேலும் பார்க்க

ரூ.10 லட்சத்தில் சாலை பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியம், வளையாம்பட்டு ஊராட்சி இந்திரா நகா், பாரத் நகா் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.10 லட்சத்தில் புதிதாக சாலைப் பணிகள் நடைபெறுகின்றன. சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலி... மேலும் பார்க்க

போதைப் பொருள் நடமாட்டம் முற்றிலும் ஒழிப்பு: திருப்பத்தூா் எஸ்.பி சியாமளா தேவி

திருப்பத்தூா் மாவட்டத்தில் கள்ளச் சாராயம், போதை பொருள்கள் நடமாட்டம் முற்றிலுமாக தடை செய்யப்படும் என்று புதிய எஸ்.பி. வி.சியாமளா தேவி தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்டத்தின் எஸ்.பி.-யாக வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

ஆம்பூரில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தை தனி நபா் ஆக்கிரமித்து கட்டியுள்ளதை அகற்றக் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆம்பூா் அருகே கோவிந்தாபுரம் பகுதியில் ரயில்வே இருப்புப் பாதைக்கு அருக... மேலும் பார்க்க