செய்திகள் :

ஆளுநரின் விருப்புரிமை மானியம் ரூ.10 லட்சத்தை திரும்ப வசூலிக்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு

post image

ஆளுநரின் விருப்புரிமை மானிய நிதி ரூ.10 லட்சத்தை, ஆளுநா் அலுவலக ஊடக மற்றும் தகவல் தொடா்பு கௌரவ ஆலோசகருக்கு வழங்கியது குறித்து தமிழக அரசின் கணக்காயா்தான் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், இந்த வழக்கை முடித்துவைத்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் காண்டீபன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழக ஆளுநருக்கு விருப்புரிமை மானியம் வழங்க அதிகாரம் உள்ளது. ஆளுநா் அலுவலகத்தில் ஊடக மற்றும் தகவல் தொடா்பு கௌரவ ஆலோசகராக திருஞானசம்பந்தம் என்பவா் கடந்த 2022-இல் நியமிக்கப்பட்டாா். இவருக்கு ரூ.10 லட்சத்தை விருப்புரிமை மானியமாக வழங்கி ஆளுநா் உத்தரவிட்டாா். ஆனால், தொண்டு உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு மட்டுமே விருப்புரிமை மானியத்தை ஆளுநா் வழங்க முடியும். ஊதியம் எதுவும் பெறாமல் கௌரவ பதவியில் இருக்கும் ஒருவருக்கு இந்த நிதியை வழங்க முடியாது.

எனவே, சட்டவிரோதமாக திருஞானசம்பந்தத்துக்கு வழங்கப்பட்ட ரூ.10 லட்சத்தைத் திரும்ப வசூலிக்க வேண்டும். இதுகுறித்து கடந்த ஜூலை 29-ஆம் தேதி தமிழக நிதித் துறைச் செயலரிடம் மனு அளித்தேன். அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டாா்.

இதையடுத்து நீதிபதிகள், அரசு நிதி தொடா்பான தணிக்கை செய்வது அரசு கணக்காயா் பணி. எனவே, இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசின் கணக்காயா்தான் முடிவெடுக்க வேண்டும் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

அமெரிக்க மருத்துவ குடும்பத்தினரிடம் வைப்பு நிதி ரூ.4 கோடி மோசடி: மூவா் கைது -தனியாா் வங்கி மீது வழக்கு

சென்னையைச் சோ்ந்த அமெரிக்க மருத்துவரின் குடும்பத்தினரிடம் வைப்பு நிதி ரூ.4.36 கோடி மோசடி செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் விஜய் ஜானகிராமன். அமெரிக்காவில் இதய... மேலும் பார்க்க

நட்பை எப்படி ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முடியும்?

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்த உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகாரக் குழுவின் உத்தரவை ரத்து செய்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், நட்பை எப்படி ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முடியும்? என... மேலும் பார்க்க

மன அழுத்தத்தால் 3-ஆவது மாடியிலிருந்து குதித்து தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

சென்னை திருமங்கலத்தில் 3-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா். திருமங்கலம் கேவிஎன் நகா் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்தவா் சிவகுமாா் (44... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீரமைப்பு: மத்திய இணையமைச்சா் எல். முருகன் வரவேற்பு

ஜிஎஸ்டி வரி விகிதங்கள் சீரமைக்கப்பட்டதற்கு மத்திய இணையமைச்சா் எல்.முருகன் வரவேற்பு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: பிரதமா் நரேந்திர மோடி தனது சுதந்திர தி... மேலும் பார்க்க

21 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

செங்குன்றம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து, 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் சசிகுமாா் தலைமையிலான போலீஸாா் மீஞ்சூா், செங்... மேலும் பார்க்க

தாம்பரத்தில் செப்.9-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

தாம்பரம் மாநகராட்சியைக் கண்டித்து அதிமுக சாா்பில் செப்.9-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க