செய்திகள் :

இந்தியா - அமெரிக்கா பேச்சுவார்த்தை எந்த நிலையில் உள்ளது? - ட்ரம்ப் அறிவிப்பு; வரி குறைக்கப்படுமா?

post image

வருகின்ற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பரஸ்பர வரி அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 9-ம் தேதி முதல் வருகின்ற ஆகஸ்ட் 1-ம் தேதி வரை காலக்கெடு. இந்த நாள்களில் அமெரிக்கா உடன் எந்தெந்த நாடுகள் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்கிறதோ, அந்த நாடுகளுக்கு வரி விகிதம் மாறுபடும். அதாவது கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அறிவித்த வரியை விட, இப்போது வரி குறைக்கப்படும்.

பிரதமர் மோடி - டொனால்ட் ட்ரம்ப்
பிரதமர் மோடி - டொனால்ட் ட்ரம்ப்

இந்தியா...?

அப்படி ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகளுக்கு ட்ரம்ப் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். ஆனால், இந்தப் பட்டியலில் இப்போது வரை இந்தியா இல்லை.

இந்தியா அமெரிக்கா உடன் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், இந்தியா இது குறித்து இதுவரை பெரிதாக எதுவும் சொல்லவில்லை.

நேற்று முன்தினம்...

இந்த நிலையில் நேற்று முன்தினம், ட்ரம்ப், 'இந்தோனேசியா உடன் அமெரிக்கா ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்கா இந்தோனேசியா சந்தைகளில் எளிதாக வர்த்தகம் செய்யலாம்.

அதே மாதிரியான ஒப்பந்தத்திற்கு தான் இந்தியா உடன் பேச்சுவார்த்தை நடந்தி கொண்டிருக்கிறோம். இதன் பின், இந்திய சந்தைகளில் அமெரிக்கா கால் பதிக்கலாம்" என்று தெரிவித்திருந்தார்.

Donald Trump - டொனால்டு ட்ரம்ப்
Donald Trump - டொனால்டு ட்ரம்ப்

நேற்று...

நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ட்ரம்ப், "இந்தியா உடனான பேச்சுவார்த்தை நிறைவடைய போகிறது" என்று கூறியுள்ளார்.

ஏப்ரல் 2-ம் தேதி, இந்தியாவிற்கு அறிவித்த 26 சதவிகிதம், வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி அறிவிக்கப்பட உள்ள வரியில் குறையும் என்று நம்புவோம்.

``விசிக மீது சந்தேகத்தை எழுப்பி கூட்டணியில் குழப்பம் விளைவிக்கிறார்..'' - எடப்பாடி குறித்து திருமா

‘பிரமாண்டமான கட்சி அதிமுக கூட்டணிக்கு வருகிறது’ என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர்.திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் த... மேலும் பார்க்க

``பிரமாண்டமான கட்சி எங்க கூட்டணிக்கு வருகிறது..'' - எடப்பாடி பழனிசாமி ஓப்பன் டாக்

‘பிரமாண்டமான கட்சி அதிமுக கூட்டணிக்கு வருகிறது’ என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர்.திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் த... மேலும் பார்க்க

US Judges: 17 நீதிபதிகளைப் பணிநீக்கம் செய்த ட்ரம்ப்; அமெரிக்காவில் கடும் சர்ச்சை.. பின்னணி என்ன?

அமெரிக்க ட்ரம்ப் அரசாங்கம், சமீபத்தில், 17 நீதிபதிகளை பணியில் இருந்து நீக்கியுள்ளது.யார் இந்த நீதிபதிகள்? இது குறித்து நீதிபதிகள் சங்கம், "எந்தவொரு காரணமும் இல்லாமல், கடந்த வெள்ளிக்கிழமை 15 நீதிபதிகளு... மேலும் பார்க்க

``பதிலடி கொடுக்காவிட்டால் காமராஜர் ஆன்மா மன்னிக்காது..'' - திருச்சி சிவா பேச்சு குறித்து ஜோதிமணி

தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா காமராஜரைப் பற்றி பேசிய கருத்துகள் எதிர்வினைகளை கிளப்பியிருக்கிருக்கிறது. இந்நிலையில், கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி தனது சமுகவளைதள பக்கத்தில் தனது எதிர்ப்ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

Doctor Vikatan:சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆரோக்கிய உணவா... பொதுவாக ஜிம் செல்வோர், உடற்பயிற்சி செய்வோர்தான் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவதைப் பார்க்கிறோம். எல்லோரும் சாப்பிடலாமா, அதில் மாவுச்சத்தும் ச... மேலும் பார்க்க

Health: சோர்வே போ போ.. எனர்ஜியே வா வா..! டாக்டர் கைடன்ஸ்!

சோர்வு... இதை அசதி, அலுப்பு, களைப்பு, தளர்ச்சி என்றெல்லாம் சொல்வார்கள். பொதுவாகவே நாள் முழுவதும் வேலை பார்ப்பதால், இரவில் சோர்வு ஏற்படுவது இயல்பே. சில வேளைகளில், பல நாள்கள் ஓய்வில்லாமல் வேலை பார்த்து,... மேலும் பார்க்க