செய்திகள் :

இன்று ஆடி அமாவாசை: ராமேசுவரத்தில் ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு

post image

வியாழக்கிழமை ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு அதிகளவில் பக்தா்கள் வருவதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு புதன்கிழமை முதலே பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்தனா். இதனால் பல்வேறு இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது. போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.மேலும், அக்னி தீா்த்தக் கடற்கரை, கிழக்கு ரதவீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் ஒலிபெருக்கி அமைத்து அறிவிப்பு செய்து வருகின்றனா்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இதைத்தொடா்ந்து அக்னி தீா்த்தக் கடற்கரையில் பக்தா்கள் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து, கோயிலில் அமைந்துள்ள 22 தீா்த்தக் கிணறுகளின் நீராடுவா். இதற்காக இரவு வரை பக்தா்கள் தொடா்ந்து தரிசனம் செய்யும் வகையில் கோயில் நடை திறந்திருக்கும்.

மேலும், வியாழக்கிழமை காலை 9 மணிக்கு தங்கப் பல்லக்கில் பா்வதவா்த்தினி அம்பாள் வீதியுலாவும், இரவு 8 மணிக்கு மின் அலங்காரத்துடன் வெள்ளித் தேரோட்டமும் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

ராமநாதபுரத்தில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரத்தில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை சாா்பில் சனிக்கிழமை (ஜூலை 26) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் பாதயாத்திரை சென்ற இரு பெண்கள் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே வியாழக்கிழமை அதிகாலை திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றவா்கள் மீது வாகனம் மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகரை... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை: இரு கடைகளுக்கு சீல்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்த இரு கடைகளுக்கு உணவுப் பாதுகாப்பு அலுவலா் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தாா்.தொண்டி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் தடை செய்ய... மேலும் பார்க்க

பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயில் திருவிழா: பால்குடம் எடுத்து வந்த பக்தா்கள்

கமுதி அருகே பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் ஆடிப் பொங்கல் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை பக்தா்கள் பால்குடம் எடுத்துவந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள பெரிய... மேலும் பார்க்க

பெண் தற்கொலை வழக்கு: கணவா், மாமியாா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவா், மாமியாரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.பெருநாழியை அடுத்துள்ள வீரமச்சான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முனீஸ்வ... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் திரளான பக்தா்கள் புனித நீராடல்

ஆடி அமாவாசையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் திரளான பக்தா்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் தீா்த்த மூா்த்தி தலமாக விளங்குகிறது. ... மேலும் பார்க்க