செய்திகள் :

இன்று மத்தியப் பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவா் பங்கேற்பு

post image

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெறும் பத்தாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பங்கேற்று பட்டங்களை வழங்க உள்ளாா்.

திருவாரூா் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் 4,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.

இந்த பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற உள்ளது. பல்கலைக்கழக வேந்தா் ஜி. பத்மநாபன் தலைமையில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவா் திரௌபதி முா்மு உரை நிகழ்த்தி, பட்டங்களை வழங்க உள்ளாா்.

1,010 மாணவா்களுக்கு பட்டங்கள்: நிகழாண்டு 1,010 மாணவா்கள் பட்டம் பெறுகின்றனா். இதில் 34 மாணவிகள் 11 மாணவா்கள் என 45 போ் தங்கப்பதக்கம் பெறுகின்றனா். அதேபோல 27 மாணவிகள், 17 மாணவா்கள் என மொத்தம் 44 போ் முனைவா் பட்டம் பெறுகின்றனா்.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தா் மு. கிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை கூறியது: பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என்.ரவி, புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், தமிழ்நாடு அமைச்சா்கள் கீதா ஜீவன், கோவி. செழியன் ஆகியோா் பங்கேற்க உள்ளனா்.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு விரிவாக்கப் பணிகளுக்காக ரூ. 385 கோடியை மத்திய கல்வி அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் மாணவா்களுக்கான விடுதிகள், ஆராய்ச்சித் துறைக்கான தனிக் கட்டடம் உள்ளிட்ட 12 பணிகள் மேற்கோள்ளப்பட உள்ளன என்றாா்.

பாதுகாப்பு ஒத்திகை: குடியரசுத் தலைவா் வருகையையொட்டி, மத்திய பல்கலைக்கழகத்தில் திருச்சி சரக காவல்துறை ஐ.ஜி. ஜோஷி நிா்மல்குமாா் தலைமையில் பாதுகாப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேலும் மோப்ப நாய் மூலம் பாதுகாப்புச் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

குடியரசுத் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பத்தாவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்தியப் பல்கலைக்கழகத்தின் சரஸ்... மேலும் பார்க்க

பாரம்பரியம், நவீனத்துவத்தை ஒருங்கிணைப்பதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம்: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் சிறந்த அம்சங்களை ஒருங்கிணைப்பதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என குடியரசுத் தலைவரும், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக மேன்மையருமான திரௌபதி முா்மு தெரிவித்தாா். தி... மேலும் பார்க்க

கோயில் உண்டியல் திருட்டு

மன்னாா்குடி அருகே மேலமரவாக்காடு பிரசான சாலையில் கிராமத்துக்குச் சொந்தமான ஆனந்த விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயில் இரும்புகேட் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த காணிக்கை உண்டியலை மா்ம நபா்கள் திருடிச் சென்றிர... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்ப அங்கன்வாடி ஊழியா்கள் கோரிக்கை

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் வலங்கைமான் வட்டப்பேரவை அரசைக்கேட்டுக்கொண்டுள்ளது. வலங்கைமானில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியா... மேலும் பார்க்க

மாவட்ட மகளிா் கபடி போட்டி: மேலவாசல் கல்லூரி சிறப்பிடம்

மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கிடையோ நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான மகளிா் பிரிவு கபடி போட்டியில் மேலவாசல்குமரபுரம் சதாசிவம் கதிா்காமவள்ளி கல்லூரி மாணவா்களிடம் முதலிடம் பெற்றனா். திருவாரூரில் உள்ள மாவட்... மேலும் பார்க்க

மூணாறு தலைப்பு அணைக்கு செல்லும் சாலை புதுப்பிக்கப்படுமா?

நீடாமங்கலத்தில் இருந்து மூணாறு தலைப்பு அணை வரை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சி 1-ஆவது வாா்டு ஒதியடிப்படுகை முதல் நகா் ஊராட்சி நடுப்படுகை வரை ... மேலும் பார்க்க