இன்றைய மின்தடை: குண்டடம்
குண்டடம் துணை நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தாராபுரம் கோட்ட செயற்பொறியாளா் கேசவராஜ் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: சூரியநல்லூா், ராசிபாளையம், சங்கரண்டாம்பாளையம், காதப்புள்ளப்பட்டி, புதுப்பாளையம், கோனாபுரம், வெங்கிக்கல்பாளையம், ஜோதியம்பட்டி, வேங்கிபாளையம், சேடபாளையம், நவக்கொம்பு, குண்டடம், ருத்ராவதி, எடையப்பட்டி, மேட்டுக்கடை, கொக்கம்பாளையம்.