இன்றைய மின்தடை: க.க.சாவடி
கோவை, க.க.சாவடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஆகஸ்ட் 20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: முருகன்பதி, சாவடிபுதூா், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனூா், வீரப்பனூா், ஏ.ஜி.பதி, குமிட்டிபதி, திருமலையாம்பாளையம், ரங்கசமுத்திரம்.