செய்திகள் :

இறுதிக்கட்டத்தில் சஞ்சய் தத், ரன்வீர் சிங், மாதவன் படம்!

post image

நடிகர்கள் ரன்வீர் சிங், சஞ்சய் தத், மாதவன் நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது.

உரி (uri the surgical strike) திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆதித்யா தார் அடுத்ததாக நடிகர்கள் ரன்வீர் சிங், சஞ்சய் தத், மாதவன் ஆகியோரை முன்னணி கதாபாத்திரமாக வைத்து, தூரந்தர் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

ஆக்சன் திரில்லர் படமாக இது உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ரன்வீர் சிங்குடன் சஞ்சய் தத் மற்றும் மாதவன் இணைந்து நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. விரைவில், இப்படத்தின் அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: ரெட்ரோ வெளியான தேதியில் வெளியாகும் சூர்யா - 46?

இந்தியாவுக்கு ஒரே நாளில் தங்கம் உள்பட 6 பதக்கங்கள்

தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் 2-ஆம் நாளான புதன்கிழமை, இந்தியாவுக்கு 1 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என 6 பதக்கங்கள் கிடைத்தன. இதில் தமிழக வீரா், வீராங்கனைகளின் பங்களிப்பும் அடக்... மேலும் பார்க்க

சாத்விக்/சிராக் இணை வெற்றி

சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர இரட்டையா் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை முதல் சுற்றில் புதன்கிழமை வெற்றி பெற்றது.ஆடவா் இரட்டையா் பிரிவில் சாத்வ... மேலும் பார்க்க

குகேஷ் மீண்டும் தோல்வி; அா்ஜுன் இணை முன்னிலை

நாா்வே செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில், இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி, நடப்பு உலக சாம்பியனும், சக நாட்டவருமான டி. குகேஷை வீழ்த்தினாா். போட்டியில் குகேஷுக்கு இது 2-ஆவது தோல்வியாக இருக்க, அா்ஜுன் 2-ஆவது வ... மேலும் பார்க்க

அல்கராஸ், பாலினி முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா். ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், உலகின் 2-ஆம் நிலை வீரரும்... மேலும் பார்க்க

கிரீன் ஸ்கிரீனில் படங்கள் எடுப்பதை வெறுக்கிறேன்: கார்த்திக் சுப்புராஜ்

கம்யூட்டர் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரூ. 1000 கோடியில் ஒரு படம் எடுப்பதை விட அந்தத்தொகையில், 20 அல்லது 30 படங்களை இயக்குவேன் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். கிரீன்... மேலும் பார்க்க

மறக்கமுடியாத, மகத்தான கற்றல் அனுபவம்: சூரி

மாமன் படத்தில் நடிகர் ராஜ்கிரணுடன் நடித்தது குறித்து நடிகர் சூரி மறக்க முடியாத, மகத்தான கற்றல் அனுபவம் எனக் கூறியுள்ளார். நகைச்சுவை நடிகராக இருந்து நாயகனாக மாறியிருக்கும் சூரியின் நடிப்பில் சமீபத்தில்... மேலும் பார்க்க