இறுதிக்கட்டத்தில் மலர் தொடர்!
மலர் தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப். 27 முதல் மலர் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடர் அக்கா - தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டு மலர் என்ற பாத்திரத்தை மையமாககொண்டு திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 11 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
மலர் தொடரின் பிரதான பாத்திரங்களில் அஸ்வதி, சுரேந்தர் ராஜும் நடித்து வருகின்றனர். முன்னதாக, மலர் பாத்திரத்தில் நடித்துவந்த பிரீத்தி ஷர்மா இத்தொடரில் இருந்து விலகியதால் அஸ்வதி நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: கவினின் கிஸ் படப்பிடிப்பு நிறைவு!
மேலும், இத்தொடரில் நிவிஷா, வருண், நிஹாரிகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 550-க்கு எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் இத்தொடர், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
மலர் தொடருக்கான வசனங்களை கார்த்திக் யுவராஜ் எழுத, ஜவஹர் இயக்கி வருகிறார். சன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இத்தொடரை தயாரித்து வருகிறது.
இந்நிலையில், மலர் தொடரின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் விரைவில் நிறைவடையவுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் மலர் தொடர் பார்க்கும் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.