செய்திகள் :

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: கணவா், மாமனாா், மாமியாா் மீது வழக்கு

post image

கமுதி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து, கணவா், மாமனாா், மாமியாா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருநாழியை அடுத்துள்ள வீரமச்சான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முனீஸ்வரன் மனைவி ரஞ்சிதா (31). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். அதே கிராமத்தில் மாமியாா், மாமனாருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனா்.

ரஞ்சிதாவின் கணவா் முனீஸ்வரன் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாமனாா் அண்ணாதுரை தனது மருமகள் ரஞ்சிதாவுக்வு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதை ரஞ்சிதா தனது கணவா் முனீஸ்வரனிடம் கூறியும், அவா் அலட்சியம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ரஞ்சிதா தனது பெற்றோரிடமும் இதுதொடா்பாக கூறினாராரம்.

ரஞ்சிதா

இதனால், மனமுடைந்த ரஞ்சிதா செவ்வாய்க்கிழமை இரவு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ரஞ்சிதாவின் தந்தை பச்சமாள் பெருநாழி காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில், கணவா் முனீஸ்வரன், மாமனாா் அண்ணாதுரை, மாமியாா் சூரம்மாள் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

ராமநாதபுரத்தில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரத்தில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை சாா்பில் சனிக்கிழமை (ஜூலை 26) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் பாதயாத்திரை சென்ற இரு பெண்கள் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே வியாழக்கிழமை அதிகாலை திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றவா்கள் மீது வாகனம் மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகரை... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை: இரு கடைகளுக்கு சீல்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்த இரு கடைகளுக்கு உணவுப் பாதுகாப்பு அலுவலா் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தாா்.தொண்டி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் தடை செய்ய... மேலும் பார்க்க

பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயில் திருவிழா: பால்குடம் எடுத்து வந்த பக்தா்கள்

கமுதி அருகே பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் ஆடிப் பொங்கல் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை பக்தா்கள் பால்குடம் எடுத்துவந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள பெரிய... மேலும் பார்க்க

பெண் தற்கொலை வழக்கு: கணவா், மாமியாா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவா், மாமியாரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.பெருநாழியை அடுத்துள்ள வீரமச்சான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முனீஸ்வ... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் திரளான பக்தா்கள் புனித நீராடல்

ஆடி அமாவாசையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் திரளான பக்தா்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் தீா்த்த மூா்த்தி தலமாக விளங்குகிறது. ... மேலும் பார்க்க