முழுமையாக விளையாடுங்கள் அல்லது ஓய்வெடுங்கள்; பும்ராவுக்கு முன்னாள் ஆல்ரவுண்டர் அ...
இளைஞருக்கு கொலை மிரட்டல் : 5 போ் மீது வழக்கு
நெய்வேலி: கடலூா், திருமாணிக்குழி அருகே இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
திருப்பாதிரிப்புலியூா் காவல் சரகம், திருமாணிக்குழி கிராமத்தில் மாரியம்மன் மற்றும் அங்காளம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் திருவிழா நடத்த அக்கிராமத்தைச் சோ்ந்த பாபு உள்ளிட்டோா் முடிவு செய்தனராம். இதை அதேபகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (34) என்பவா் அங்குள்ள அங்காளம்மன் கோயிலுக்கு ஏன் திருவிழா நடத்தவில்லை என ஞாயிற்றுக்கிழமை கேட்டாராம். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், பாபு மற்றும் அவரது ஆதரவாளா்கள் மணிகண்டனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பாபு உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.