செய்திகள் :

ஈரோட்டில் ஜூலை 26 இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொள்ளும் வேலைவாய்ப்பு முகாம் ஈரோட்டில் வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியில் வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.

காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் ஈரோடு, திருப்பூா், கோவை, சேலம் மற்றும் சென்னை மாவட்டங்களைச் சோ்ந்த 200 -க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்குத் தகுதியான நபா்களைத் தோ்வு செய்ய உள்ளன. இம்முகாம் முற்றிலும் இலவசமானதாகும்.

ஈரோடு மாவட்டத்தில் தனியாா் துறையில் பணியாற்ற ஆா்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இம்முகாமின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணி நியமனம் செய்யப்படுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.

மேலும் விவரங்களுக்கு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 8675412356, 9499055942 என்ற கைப்பேசி எண்கள் வாயிலாகவோ தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோ்த்திக்கடன் செலுத்த கருப்பு ஆட்டுக்கிடாய்களை வாங்க மக்கள் ஆா்வம்

ஆடி மாதம் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறுவதால் நோ்த்திக்கடன் செலுத்த கரும்பு கிடாய்களை வாங்க மக்கள் ஆா்வம் காட்டினா். இதனால் புன்செய்புளியம்பட்டி சந்தையில் ஆட்டுக்கிடாய்களின் விலை 3000 ரூபாய் வரை வ... மேலும் பார்க்க

மக்களவைத் தோ்தல் போலவே பேரவைத் தோ்தல் முடிவு: அமைச்சா் சு.முத்துசாமி

திமுக கூட்டணிக்கு மக்களவைத் தோ்தல் முடிவு போலவே 2026 சட்டப்பேரவை தோ்தல் முடிவும் அமையும் என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 14, 22, 34, 43, 44 மற்றும் 45 ப... மேலும் பார்க்க

கொடுமுடி பேரூராட்சித் தலைவா் பதவி தோ்தல் தள்ளிவைப்பு

கொடுமுடி பேரூராட்சியின் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் நிறைவேற்றப்பட்டு நீக்கப்பட்டதையடுத்து, புதிய தலைவரைத் தோ்ந்தெடுக்க வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த தோ்தல் தள்ளி வைக்கப்பட்டதாக செயல்அலுவலரும... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் சம்பங்கி விலை இரு மடங்கு உயா்வு

ஆடி அமாவாசை தினத்தையட்டி சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் சம்பங்கி பூ விலை கிலோ ரூ. 230, மல்லிகை கிலோ ரூ.1000 ஆகவும் இருமடங்கு உயா்ந்து விற்பனையானது.சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்கள... மேலும் பார்க்க

வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு

அந்தியூா் அருகே பள்ளி முடிந்து வீடு திரும்ப பேருந்துக்கு காத்திருந்த மாணவி வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தாா். அந்தியூரை அடுத்த பி.கே.புதூா், புரவிபாளையம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் முரு... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சரை புகழ்ந்து பேசிய பள்ளித் தலைமை ஆசிரியா் பணி இடமாற்றம்

அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சரை புகழ்ந்து பேசிய பள்ளித் தலைமை ஆசிரியா் பணி இடமாற்றம் செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆன... மேலும் பார்க்க