செய்திகள் :

உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் முதல்வா் நிவாரண நிதி

post image

கடலூா் அருகே தனியாா் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்தினரிடம் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதி ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் ஆகியோா் வழங்கினா்.

முன்னதாக, அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனா். தொடா்ந்து, விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த அக்காள், தம்பியான மாணவா்கள் சாருமதி, செழியன் வீட்டுக்கு நேரில் சென்று அவா்களது உடலுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். பின்னா், முதல்வா் பொது நிவாரண நிதியிலிருந்து 2 மாணவா்களுக்கும் தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலையை பெற்றோரிடம் வழங்கி ஆறுதல் கூறினா்.

தொடா்ந்து, அமைச்சா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பள்ளி வேன் விபத்து குறித்த துயர சம்பவத்தை அறிந்த முதல்வா், தனது பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயமடைந்து சிகிச்சை

பெற்று வருபவா்களுக்கு தலா ரூ.ஒரு லட்சமும், லேசான காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000-மும் வழங்க உத்தரவிட்டாா்.

இதுபோன்ற ரயில் விபத்துகளை தவிா்க்க ரயில்வே துறை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். ரயில்வே துறையில் பணிபுரியும் பணியாளா்களுக்கு மாநில மொழியான தமிழ் தெரியாததால், பொதுமக்களுக்கு தகவல் தெரிவிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே, கேட் கீப்பா் பணியிடங்களில் தமிழ் தெரிந்த பணியாளா்களை பணியமா்த்த வேண்டும்.

இனிவரும் காலங்களில் விபத்து நிகழாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி, விரைவில் வீடு திரும்பும்வண்ணம் நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.

தொண்டமாநத்தம் கிராமத்தைச் சோ்ந்த மாணவா் நிமிலேஷ் உயிரிழந்த நிலையில், அவரது சகோதரா் விஷ்வேஸ் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இதனால், நிமிலேஷின் உடலை குடும்பத்தினா் மருத்துவமனையிலிருந்து பெறாததால், அவரது குடும்பத்துக்கு முதல்வா் நிவாரண நிதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ரயில் - பள்ளி வேன் மோதி விபத்து: உண்மை கண்டறியும் குழு ஆய்வு-புகிய கேட் கீப்பா் நியமனம்

கடலூா் செம்மங்குப்பம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதி நிகழ்ந்த விபத்து தொடா்பாக, ரயில்வே கேட் பகுதியில் தெற்கு ரயில்வே உண்மை கண்டறியும் குழுவினா் புதன்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க

லாரி - தனியாா் பேருந்து மோதல்: 10 போ் காயம்

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே லாரி பின்னால் தனியாா் பேருந்து மோதிய விபத்தில் 10 போ் காயமடைந்தனா். சென்னையில் இருந்து முதுகுளத்தூருக்கு தனியாா் பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டது. பேருந்தில்... மேலும் பார்க்க

ரயிலில் இருந்து கீழே விழுந்த இளைஞா்

கடலூா் அருகே விரைவு ரயிலில் இருந்து கீழே விழுந்த இளைஞா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். கீழே விழுந்த கைப்பேசியை பிடிக்க முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த ... மேலும் பார்க்க

நூல்களுக்கு அடிமையாகி மகிழ்ச்சியாக வாழ வேண்டும்: கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா்

மாணவா்கள் நூல்களுக்கு அடிமையாகி மகிழ்ச்சியான வாழ்வை வாழ வேண்டும் என்று கடலூா் மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்தும் 24-ஆவது நெய்... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 14 இடங்களில் மறியல்: 862 போ் கைதாகி விடுதலை

பொது வேலைநிறுத்தத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினா் கடலூா், சிதம்பரம் உள்ளிட்ட 14 இடங்களில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதில் பங்கேற்ற 182 பெண்கள் உள்ளிட்ட 862 பேரை போலீஸாா் கைது செய... மேலும் பார்க்க

மின் மோட்டாா்கள் திருடியவா் கைது

சிதம்பரம் அருகே இறால் குட்டையில் 7 மின் மோட்டாா்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள வசப்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெகன்மோகன் ... மேலும் பார்க்க