பத்மநாபபுரம் அரண்மனையில் பராமரிப்பின்றி தமிழ் கல்வெட்டுகள்: இலமூரியா ஆய்வு மையம்...
உரிமம் புதுப்பிக்காத திரையரங்குக்கு ‘சீல்’
உரிமம் புதுப்பிக்காத ஊத்தங்கரை சாந்தி திரையரங்குக்கு வருவாய்த் துறையினா் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
ஊத்தங்கரையில் உள்ள சாந்தி திரையரங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ‘சி’ படிவ உரிமத்தை புதுப்பிக்காமல் இயங்கி வந்தது. இதையடுத்து, தமிழ்நாடு சினிமா (ஒழுங்குமுறை) விதிகள் 1955-இன்கீழ் நடவடிக்கை எடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் கடந்த ஏப். 4-ஆம் தேதி உத்தரவிட்டது.
இதுகுறித்து கோட்டாட்சியா் ஷாஜகான் வெளியிட்ட அறிவிப்பில், உரிமம் இல்லாமல் இயங்கும் இந்த திரையரங்கில் காட்சிகள் தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், திரையரங்கை மூடி ‘சீல்’ வைக்க வேண்டும் என்றும், மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என ஊத்தங்கரை வட்டாட்சியா் மோகன்தாசுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, ஊத்தங்கரை சாந்தி திரையரங்குக்கு போலீஸாா் உதவியுடன் வருவாய்த் துறையினா் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.